ஸ்ரீ சக்கரம்: பாகம் – 2

ஸ்ரீசக்கரத்தில் அடி பாகத்திலிருந்து பூஜை செய்ய வேண்டும். ஸ்ரீசக்கரத்தின் பூபுரமே தேவியின் பாதங்கள் என்று புஷ்பாஞ்சலி செய்வதும் உண்டு.

9 கோணங்களும் தேவியின் சரீர பாகங்களும்:

பூபுரம் – பாதங்கள்
விருத்தந்திரயம்  – தொடை
16 தள கமலம் – இடுப்பு
8 தள கமலம் – நாபி
14 கோணம் – இருதயம்
பஹிரதகாரம் – கழுத்து
அந்தாத்தசாரம்  – புருவமத்தி
அஷ்ட கோணம் – நெற்றி
திரிகோணம் – சிரசு
இவை தவிர பிந்து ஸ்தானம் என்பது அன்னையின் பிரம்மரந்திரம் என்னும் உச்சந்தலை ஆகும்.

பூபுரம் மூன்று சதுரங்களை உடையது – திரைலோக்கிய மோகனம்.

முதலாவது சக்கரத்தில் ஒன்றாவது கோட்டில் 10 தேவதைகள் உள்ளன.
1. அணிமா
2. லகிமா
3. மகிமா
4. ஈசித்துவம்
5. வசித்துவம்
6. பிராகாமியம்
7. புக்தி 
8. இச்சா
9. பிராப்தி
10. சர்வ காம்ய சித்தி

முதலாவது சக்கரத்தில் இரண்டாவது நடுக்கோட்டில் எட்டு தேவிகள் உள்ளனர்.

தேவிகளின் வரிசை
1. பிராம்ஹி 
2. மகேஸ்வரி
3. கௌமாரி
4. வைஷ்ணவி
5. வாராகி
6. மாஹேந்திரி 
7. சாமுண்டா
8. மகாலக்ஷ்மி

முதலாவது சக்கரத்தில் மூன்றாவது கோட்டில்

1. ஸர்வ ஸம்ஷோபினி 
2. ஸர்வ வித்ராவினி
3. ஸர்வ கர்ஷினி 
4. ஸர்வ வசங்கரி
5. ஸர்வோன் மாதினி
6. ஸர்வ மஹாங்குசா 
7. ஸர்வ கேசரி 
8. ஸர்வ பீஜ 
9. ஸர்வ யோனி
10. ஸர்வத் ரிகண்டா

ஸர்வா சாபரி பூரகம் இரண்டாவது சக்கரம்

16 ஆகர்ஷண தேவதைகள் உள்ளனர்
1. காமா கர்ஷினி
2. புத்யா கர்ஷினி 
3. அஹங்காரா கர்ஷினி
4. சப்தா கர்ஷினி
5. ஸ்பர்சா கர்ஷினி
6. ரூபா கர்ஷினி
7. ரஷா கர்ஷினி
8. கந்தா கர்ஷினி
9. சித்தா கர்ஷினி
10. தைர்யா கர்ஷினி
11. ஸம்ருத்யா  கர்ஷினி
12. நாமா கர்ஷினி
13. பீஜா கர்ஷினி
14. ஆத்மா கர்ஷினி
15. அம்ருதா  கர்ஷினி
16. சரிரா கர்ஷினி

image: ta.wikipedia.org

இவர்களில் மூன்றாவது உள்ள அஹங்காரா கர்ஷினி சக்தி தான்
ஸ்ரீ மகா பிரத்தியங்கிரா தேவி. ஸ்ரீ நரசிம்ம சுவாமியின் உக்ர குணத்தை தன்னிடம்ஆகர்ஷணம் செய்வித்து, அவரை சாந்தப்படுத்தியவள்.

ஸ்ரீ விநாயகரின் மந்திரங்களும் மற்றும் ஸ்ரீ வாஞ்சா கல்பலதா கணபதியின் பெருமைகளும்

Leave a Comment

Your email address will not be published.