January 2023

நாலாயிர திவ்வியப் பிரபந்தம் – 68 | Naalayira Divya Prabandham – 68

மத்தள வுந்தயிரும் வார்குழல் நன்மடவார்
வைத்தன நெய்களவால் வாரிவி ழுங்கி, ஒருங்
கொத்தவி ணைமருத முன்னிய வந்தவரை
ஊருக ரத்தினொடும் உந்திய வெந்திறலோய்!
முத்தினி ளமுறுவல் முற்றவ ருவதன்முன்
முன்னமு கத்தணியார் மொய்குழல் களலைய,
அத்த!எ னக்கொருகா லாடுக செங்கீரை,
ஆயர்கள் போரேறே! ஆடுக ஆடுகவே.

 


ஸ்ரீ முருகன் கந்தர் அந்தாதி 14

செந்தி லகத்தலர் வாணுதல் வேடிச் சிமுகபங்க
செந்தி லகத்தலர் துண்டமென் னாநின்ற சேயசங்க
செந்தி லகத்தலர் ராசிதந் தானைச் சிறையிட்டவேற்
செந்தி லகத்தலர் தூற்றிடுங் கேடு திவாகருளே.

 

 

ஆறாம் திருமுறை புக்க திருத்தாண்டகம் 1

மங்குல் மதிதவழும் மாட வீதி
மயிலாப்பி லுள்ளார் மருக லுள்ளார்
கொங்கிற் கொடுமுடியார் குற்றா லத்தார்
குடமூக்கி லுள்ளார்போய்க் கொள்ளம் பூதூர்த்
தங்கு மிடமறியார் சால நாளார்
தரும புரத்துள்ளார் தக்க ளூரார்
பொங்குவெண் ணீறணிந்து பூதஞ் சூழப்
புலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே.

 

அபிராமி அந்தாதி – 66. கவிஞராக

வல்லபம் ஒன்றறியேன்; சிறியேன்
நின் மலரடிச்செம்
பல்லவம் அல்லது பற்றுஒன்று
இலேன்; பசும் பொன்பொருப்பு
வில்லவர் தம்முடன் வீற்றிருப்பாய்,
வினையேன் தொடுத்த
சொல்அவ மாயினும், நின்திரு
நாமங்கள் தோத்திரமே.