துப்புடை யாயர்கள் தம் சொல்வழு வாதொருகால் தூயக ருங்குழல்நல் தோகைம யிலனைய,
நப்பினை தன்திறமா நல்விடை யேழவிய நல்லதி றலுடைய நாதனு மானவனே,
தப்பின பிள்ளைகளைத் தனமிகு சோதிபுகத் தனியொரு தேர்கடவித் தாயொடு கூட்டிய,என்
அப்ப!எ னக்கொருகா லாடுக செங்கீரை, ஆயர்கள் போரேறே! ஆடுக ஆடுகவே.