திருவாசகம் அருள் பத்து

முத்தனே முதல்வா முக்கணா முனிவா
மொட்டு அறா மலர் பறித்து இறைஞ்சிப்
பத்தியாய் நினைந்து பரவுவார் தமக்குப்
பரகதி கொடுத்து அருள்செய்யும்
சித்தனே செல்வத் திருப்பெருந்துறையில்
செழும் மலர்க் குருந்தம் மேவிய சீர்
அத்தனே அடி யேன் ஆதரித்து அழைத்தால்
அதெந்துவே என்று அருளாயே.