முருகன் ஸ்லோகங்கள்

சுப்பிரமணியர்  விருத்தம்
எத்தனை  கவியதும்  பாடியும்  தேடியும்
    இரங்காத  வாறு  மேது
ஏழைக்  கிரங்குவது  சரவணப்பெருமா
    ளிருக்கிறு  ரென்று  உரையும்
சித்தர்முதல்  வாக்கியம்  கூறியது  பொய்யோ
    சிவசுப்ர  மண்ய  நாதா
தென்பொதிகை  மாமுனிக்குபதேசம்  அன்றுநீ
    செப்பியதும்  யானறிகு  வேன்
முத்தனே  முதல்வனே  முடியனே  அடியேனை
    முன்னின்று  கார்க்க  வாவா
முச்சுடர்க்  குரியதிரு  நாதனே  வேதனே
    முப்புராதி  அன்பர்  குருவே
சப்தரிஷி  மாதவா  தாதவா  கீதவா
    தமிழ்பாடும்  வாக்கு  முதறே
தரணிதனில்  மயில்மீதில்  விளையாடி  வருகின்ற
    சண்முகக்  குமர  குருவே .
ஆரா  ரிருக்கினும்  என்கவலை  மாற்றுவது
    ஆறுமுகக்  கடவு  ளென்று
அவனிமுதல்  அன்பத்தி  அறுகாத  தேசமும் 
    அறியாத  வாறு  முண்டோ
ஈராறு  கையனே  இருமூன்றுமுடியனே
    இனியகனி  வாயழ  கனே
எட்டெட்  டறுபத்தி  நாலனே  தோளனே
    ஏககண  போக  மான .
காராரு  மேனிகரி  முகவனுக்  கிளையனே
    கழுகாசல  ஆறு  முகனே
கற்றறி  உற்றனே  சித்தப்பிர  சித்தனே
    கந்தப்ப  னாதி  வேதி
தாராரு  மையனே  னுய்யனே  ஐய்யனே
    சரிசரி  வரவே  ணுமே
தரணிதனில்  மயில்மீதில்  விளையாடி  வருகின்ற
     சண்முகக்  குமர  குருவே
ஸ்ரீ   குக   பஞ்சரத்னம்
         ( இந்த    ஸ்ரீ   குக   பஞ்சரத்னத்தை   சொல்வதால்   முருகனருள்  பூரணமாக கிடைக்கும்)

ஓம்கார
   நகரஸ்த்தம்   தம்   நிகமாந்த   வனேஸ்வரம் |
நித்ய   மேகம்   சிவம்   சாந்தம்   வந்தே   குஹம்   உமாசுதம் ||
வாசாம   கோசரம்   ஸ்கந்தம்   சிதுத்யான   விஹாரிணம் |
குருமூர்த்திம்   மஹேசானம்   வந்தே   குஹம்   உமாசுதம் ||
ஸச்சிதானந்த   ரூபேசம்   ஸம்ஸாரத்வாந்த   தீபகம் |
சுப்ரஹ்மண்யம்   அனாத்யந்தம்   வந்தே    குஹம்   உமாசுதம் ||
ஸ்வாமிநாதம்   தயாசிந்தும்   பவாப்தேஹ   தாரகம்   ப்ரபும் |
நிஷ்களங்கம்   குணாதீதம்   வந்தே   குஹம்   உமாசுதம் ||
நிராகாரம்   நிராதாரம்   நிர்விகாரம்   நிராமயம் |
நிர்த்வந்தவம்      நிராலம்பம்   வந்தே   குஹம்   உமாசுதம் ||
எதிர்த்து   நிற்கும்   எதனையும்   தகர்த்து , விரோதிகளை   வீழ்த்தும்   வல்லமை   மிக்க  வேலன்   கை   வேல்
வீரவேல்  தாரைவேல்  விண்ணேர்   சிறை   மீட்ட
தீரவேல்  செவ்வேள்   திருக்கைவேல்வாரி
குளித்தவேல்  கொற்றவேல்   சூர்மார்பும்   குன்றும்
துளைத்தவேல்   உண்டே துணை