நரசிம்மர் மந்திரங்கள்
ஸ்ரீ ந்ருசிம்ஹ காயத்ரி மந்திரம்
ஓம் வஜ்ரநகாய வித்மஹே தீக்ஷ்ண தம்ஷ்ட்ராய தீமஹி
தன்னோ நாரஸிம்ஹ ப்ரசோதயாத்
நரசிம்ம மந்திரம்
யஸ்ப அபவத் பக்தஜன ஆர்த்திஹந்துபித்ருத்வம் அந்யேஷு அவிசார்ய தூர்ணம்ஸ்தம்பே அவதார தம் அநந்ய லப்யலக்ஷ்மி ந்ருஸிம்ஹம் சரணம் பிரபத்யே.
பக்தியற்றவர்களால் அடைய முடியாதவனே! தாயின் காப்பத்தில் அவதரித்தால் தாமதமாகுமென்று தூணில் அவதரித்தவனே! நினைத்த மாத்திரத்தில் பக்தர்களின் துன்பத்தைப் போக்குபவனே! லட்சுமி நரசிம்மனே! உனது திருவடியைச் சரணடைகிறேன்.
நரசிம்ஹ ப்ரபத்தி
மாதா ந்ருஸிம்ஹ: பிதா ந்ருஸிம்ஹ:
ப்ராதா ந்ருஸிம்ஹ: ஸகா ந்ருஸிம்ஹ:
வித்யா ந்ருஸிம்ஹ: த்ரவிணம் ந்ருஸிம்ஹ:
ஸ்வாமி ந்ருஸிம்ஹ: ஸகலம் ந்ருஸிம்ஹ:
இதோ ந்ருஸிம்ஹ: ப்ரதோ ந்ருஸிம்ஹ:
யதோ யதோ யாஹி ததோ ந்ருஸிம்ஹ:
ந்ருஸிம்ஹ: தேவாத் பரோ நகஸ்சித்
தஸ்மான் ந்ருஸிம்ஹ: சரணம் ப்ரபத்யே
தமிழாக்கம்:
நரசிம்மரே தாய், நரசிம்மரே தந்தை.
சகோதரனும் நரசிம்மரே தோழனும் நரசிம்மரே!
அறிவும் நரசிம்மரே செல்வமும் நரசிம்மரே!
எஜமானும் நரசிம்மரே எல்லாமும் நரசிம்மரே!
இவ்வுலகத்திலும் நரசிம்மரே அவ்வுலகத்திலும் நரசிம்மரே!
எங்கெங்கு செல்கிறாயோ அங்கெல்லாம் நரசிம்மரே!
நரசிம்மரைக் காட்டிலும் உயர்ந்தவர் எவரும் இல்லை.
அதனால் நரசிம்மரே உம்மைச் சரணடைகிறேன்.
ஸ்ரீ நரசிம்ம மஹா மந்திரம்
ஓம் உக்ரவீரம் மஹாவிஷ்ணும்
ஜ்வலந்தம் ஸர்வதோ முகம்
ந்ருஸிம்ஹம் பீஷணம் பத்ரம்
ம்ருத்யு ம்ருத்யும் நமாம்யஹம்
நரசிம்மர் 108 போற்றி
- ஓம் நரசிங்கப் பெருமானே போற்றி
- ஓம் நாடியருள் தெய்வமே போற்றி
- ஓம் அரசு அருள்வோனே போற்றி
- ஓம் அறக் காவலனே போற்றி
- ஓம் அசுவத்த நரசிம்மனே போற்றி
- ஓம் அக்ஷயதிருதியை நாதனே போற்றி
- ஓம் அழகிய சிம்மனே போற்றி
- ஓம் அம்ருத நரசிம்மனே போற்றி
- ஓம் அருள் அபயகரனே போற்றி
- ஓம் அகோபில நரசிம்மனே போற்றி
- ஓம் அரவப் புரியோனே போற்றி
- ஓம் அஞ்ஞான நாசகனே போற்றி
- ஓம் அகோர ரூபனே போற்றி
- ஓம் ஆகாச நரசிம்மனே போற்றி
- ஓம் அட்டகாச நரசிம்மனே போற்றி
- ஓம் ஆவேச நரசிம்மனே போற்றி
- ஓம் இரண்யாக்ஷ வதனே போற்றி
- ஓம் இரண்யகசிபு நிக்ரஹனே போற்றி
- ஓம் ஈரெண் கரனே போற்றி
- ஓம் இருந்தும் அருள்வோனே போற்றி
- ஓம் உக்ர நரசிம்மனே போற்றி
- ஓம் உடனே காப்பவனே போற்றி
- ஓம் ஏற்றுவோர்க் கெளியனே போற்றி
- ஓம் எழுபத்து நான்கு வடிவனே போற்றி
- ஓம் கதிர் நரசிம்மனே போற்றி
- ஓம் கதலி நரசிம்மனே போற்றி
- ஓம் கர்ஜிப்பவனே போற்றி
- ஓம் கம்பப் பெருமானே போற்றி
- ஓம் கல்யாண நரசிம்மனே போற்றி
- ஓம் கருடாத்ரி நாதனே போற்றி
- ஓம் கனககிரி நாதனே போற்றி
- ஓம் காராஞ்ச நரசிம்மனே போற்றி
- ஓம் கிரஹண நரசிம்மனே போற்றி
- ஓம் கிரிஜா நரசிம்மனே போற்றி
- ஓம் க்ரோத நரசிம்மனே போற்றி
- ஓம் குகாந்தர நரசிம்மனே போற்றி
- ஓம் கும்பி நரசிம்மனே போற்றி
- ஓம் கோல நரசிம்மனே போற்றி
- ஓம் கோஷ்டியூர் நரசிம்மனே போற்றி
- ஓம் கோர நரசிம்மனே போற்றி
- ஓம் சந்தனப் பிரியனே போற்றி
- ஓம் சர்வாபரணனே போற்றி
- ஓம் சக்ர நரசிம்மனே போற்றி
- ஓம் சத்ர நரசிம்மனே போற்றி
- ஓம் சண்ட நரசிம்மனே போற்றி
- ஓம் சம்ஹார நரசிம்மனே போற்றி
- ஓம் சத்ரவட நரசிம்மனே போற்றி
- ஓம் சரபத்தால் குளிர்ந்தவனே போற்றி
- ஓம் ஷட்கோணத் துறைபவனே போற்றி
- ஓம் சாந்த நரசிம்மனே போற்றி
- ஓம் சிம்மாசனனே போற்றி
- ஓம் சிம்மாசலனே போற்றி
- ஓம் சுடர் விழியனே போற்றி
- ஓம் சுந்தர சிம்மனே போற்றி
- ஓம் சுதர்சன நரசிம்மனே போற்றி
- ஓம் சுவதந்திர நரசிம்மனே போற்றி
- ஓம் செவ்வாடையனே போற்றி
- ஓம் செஞ்சந்தனப் பிரியனே போற்றி
- ஓம் சௌம்ய நரசிம்மனே போற்றி
- ஓம் ஸ்தெளண நரசிம்மனே போற்றி
- ஓம் ஜ்வலன நரசிம்மனே போற்றி
- ஓம் ஜவாலா நரசிம்மனே போற்றி
- ஓம் நவ நரசிம்மனே போற்றி
- ஓம் நவவ்யூக நரசிம்மனே போற்றி
- ஓம் நிருத்ய நரசிம்மனே போற்றி
- ஓம் நின்றும் அருள்வோனே போற்றி
- ஓம் பிரசன்ன நரசிம்மனே போற்றி
- ஓம் பிரசாத நரசிம்மனே போற்றி
- ஓம் பிரஹ்லாத நரசிம்மனே போற்றி
- ஓம் பிரஹ்லாத வரத நரசிம்மனே போற்றி
- ஓம் பக்த ரக்ஷகனே போற்றி
- ஓம் பகையழித்தவனே போற்றி
- ஓம் பஞ்ச முகனே போற்றி
- ஓம் பத்மாசனனே போற்றி
- ஓம் பஞ்ச நரசிம்மனே போற்றி
- ஓம் பரத்வாஜர்க்கருளியவனே போற்றி
- ஓம் பாவக நரசிம்மனே போற்றி
- ஓம் பானக நரசிம்மனே போற்றி
- ஓம் பார்க்கவ நரசிம்மனே போற்றி
- ஓம் பாடலாத்ரி நரசிம்மனே போற்றி
- ஓம் பிருத்வி நரசிம்மனே போற்றி
- ஓம் பிரம்மனுக்கருளியவனே போற்றி
- ஓம் புஷ்டி நரசிம்மனே போற்றி
- ஓம் புராண நாயகனே போற்றி
- ஓம் புச்ச நரசிம்மனே போற்றி
- ஓம் பூவராக நரசிம்மனே போற்றி
- ஓம் மால் அவதாரமே போற்றி
- ஓம் மாலோல நரசிம்மனே போற்றி
- ஓம் முக்கண்ணனே போற்றி
- ஓம் மலையன்ன தேகனே போற்றி
- ஓம் முக்கிய அவதாரனே போற்றி
- ஓம் முப்பத்திரு ளக்ஷத்ரனே போற்றி
- ஓம் யோக நரசிம்மனே போற்றி
- ஓம் யோகானந்த நரசிம்மனே போற்றி
- ஓம் ருத்ர நரசிம்மனே போற்றி
- ஓம் ருண விமோசனனே போற்றி
- ஓம் லக்ஷ்மி நரசிம்மனே போற்றி
- ஓம் லோக ரக்ஷகனே போற்றி
- ஓம் வஜ்ர தேகனே போற்றி
- ஓம் வராக நரசிம்மனே போற்றி
- ஓம் வரப்ரத மூர்த்தியே போற்றி
- ஓம் வரதயோக நரசிம்மனே போற்றி
- ஓம் விலம்ப நரசிம்மனே போற்றி
- ஓம் வியாக்ர நரசிம்மனே போற்றி
- ஓம் விசுவரூபனே போற்றி
- ஓம் வீரவிக்ரம நரசிம்மனே போற்றி
- ஓம் விஷ்ணுஸ்வரூபனே போற்றி
- ஓம் வெற்றியருள் சிம்மனே போற்றி