sri chakram

ஸ்ரீ சக்கரம்: பாகம் – 4


ஸர்வரோகஹரம் 

ஏழாவது சக்கரத்தில் 8 தேவதைகள் உள்ளனர்

1. வசினி 
2. காமேஸ்வரி 
3. மோதினி 
4. விமலா 
5. அருணா 
6. ஜயினி 
7. சர்வேஸ்வரி 
8. கௌலினி 

ஸர்வசித்திப்ரதாயகம்

எட்டாவது சக்கரத்தில் 7அஸ்திர தேவிகள்(யுத்த தெய்வங்கள்) உள்ளனர்

1. பாணினி 
2. சாபினி 
3. பாசினி 
4. அங்குசினி 
5. மஹாகாமேஸ்வரி 
6. மஹாவஜ்ரேஸ்வரி  
7. மகாபகமாலினி 

ஸர்வானந்தமயம் 

ஒன்பதாவது சக்கரத்தில் மத்தியில் உள்ள பிந்து ஸ்தானத்தில் சிவன் காமேஸ்வரனாக  சக்தி காமேஸ்வரியாக சுற்றிலும் 15 திதி நித்தியா தேவிகளுடன் உள்ளனர்.

1. ஸ்ரீ காமேஸ்வரி 
2. ஸ்ரீ பகமாலினி 
3. ஸ்ரீ நித்யக்லின்னா 
4. ஸ்ரீ பேருண்டா 
5. ஸ்ரீ வஹ்னிவாஸினி 
6. ஸ்ரீ மகாவஜ்ரேஸ்வரி 
7. ஸ்ரீ சிவதூதி
8. ஸ்ரீ த்வரிதா
9. ஸ்ரீ குலஸுந்தரி 
10. ஸ்ரீ நித்யா 
11. ஸ்ரீ நீலபதாகா 
12. ஸ்ரீ விஜயா 
13. ஸ்ரீ சர்வமங்களா  
14. ஸ்ரீ ஜ்வாலாமாலினி 
15. ஸ்ரீ சித்ரா 


ஸ்ரீ சக்கரம்: பாகம் – 3

சர்வ ஸம்ஷோபணம் 

மூன்றாவது சக்கரத்தில் உள்ள எட்டு சக்திகளில் அனங்கமாலினியாக வர்ணிக்கப்படுகிறாள். பாசம்,  அங்குசம்,  அபயம்,  வரதம் தாங்கி, செம்பட்டு உடை உடுத்தி, செம்மலர் மாலை அணிந்து 
ஸ்ரீ லலிதாவை நமஸ்கரித்து கொண்டிருக்கும் அனங்கமாலினி மனித சரீரத்தில் ஜீவனாக, பிராணனாக விளங்கிக் கொண்டிருக்கிறாள்.  யோகக் கலைக்கு இந்த சக்தி மிக அவசியம். மூன்றாவது சக்கரத்தில் 8 தேவதைகள் உள்ளனர்.

1. அனங்க குஸுமா 
2. அனங்க மேகலா 
3. அனங்க மதனா 
4. அனங்க மதனாதுரா 
5. அனங்க ரேகா 
6. அனங்க வேகினி 
7. அனங்காங்குசா 
8. அனங்க மாலினி    

சர்வ சௌபாக்கிய தாயகம்

நாலாவது சத்திரத்தில் 14 சம்பிரதாய யோகினிகள் உள்ளனர். அதாவது ஸ்ரீ லலிதையை வழிபாடு செய்பவர்களுக்கு, சிவன் தானே குருவாக வருவார். அல்லது குரு வடிவாக உத்தம மகான்கள் வந்து சேர்வார்கள. ஆதி குருவான தக்ஷிணா மூர்த்தியே 14 உலகங்களுக்கும் குரு என்று இந்த சக்கரம் விளக்குகிறது. நமது தேகத்தில் 14 நாடிகள் உள்ளன. இந்த நாடிகளின் தேவதைகளாகவும் இவர்கள் வர்னிக்க படுகின்றனர்.
1. ஸர்வ வித்ராவினி
2. ஸர்வ கர்ஷினி 
3. ஸர்வக்லாதினி 
4. ஸர்வஸம்மோஹினி 
5. ஸர்வசதம்பினி 
6. ஸர்வஜ்ரும்பினி 
7. ஸர்வவசங்கரி  
8. ஸர்வரஞ்சனி  
9. ஸர்வோன்மாதினி  
10. ஸர்வதாஸாதகி   
11. ஸர்வசம்பத்திரிபுரணி 
12. ஸர்வமந்த்ரமயி 
13. ஸர்வதுவந்தவசயங்கரி  

சர்வார்த்த சாதகம்

ஐந்தாவது சக்கரத்தில் 10 தேவதைகள் உள்ளனர்

1. ஸர்வசித்திபிரதா 
2. ஸர்வசம்பத்பிரதா
3. ஸர்வப்ரியங்கரி 
4. ஸர்வமங்கலகாரிணி 
5. ஸர்வகாமப்ரதா
6. ஸர்வதுக்கவிமோஷினி
7. ஸர்வம்ரித்யுபிரசமணி 
8. ஸர்வவிக்னநிவாரிணி 
9. ஸர்வசர்வாங்கசுந்தரி 
10. ஸர்வஸௌபாக்யதாயினி 

சர்வ ரக்ஷா கரம்

ஆறாவது சக்கரத்தில் 10 தேவதைகள் உள்ளனர்

1. ஸர்வக்னி 
2. ஸர்வசக்தி 
3. ஸர்வஸ்வர்ய ப்ரதாயினி 
4. ஸர்வஜ்ஞானமயி 
5. ஸர்வதவ்யாதி நிவாரணி 
6. ஸர்வாதாரஸ்வரூபா 
7. ஸர்வபாபஹரா
8. ஸர்வானந்தமயி 
9. ஸர்வரக்ஷாஸ்வரூபிணி 
10. ஸர்வேப்ஸிதபலபிரதா   

ஸ்ரீ சக்கரம்: பாகம் – 2

ஸ்ரீசக்கரத்தில் அடி பாகத்திலிருந்து பூஜை செய்ய வேண்டும். ஸ்ரீசக்கரத்தின் பூபுரமே தேவியின் பாதங்கள் என்று புஷ்பாஞ்சலி செய்வதும் உண்டு.

9 கோணங்களும் தேவியின் சரீர பாகங்களும்:

பூபுரம் – பாதங்கள்
விருத்தந்திரயம்  – தொடை
16 தள கமலம் – இடுப்பு
8 தள கமலம் – நாபி
14 கோணம் – இருதயம்
பஹிரதகாரம் – கழுத்து
அந்தாத்தசாரம்  – புருவமத்தி
அஷ்ட கோணம் – நெற்றி
திரிகோணம் – சிரசு
இவை தவிர பிந்து ஸ்தானம் என்பது அன்னையின் பிரம்மரந்திரம் என்னும் உச்சந்தலை ஆகும்.

பூபுரம் மூன்று சதுரங்களை உடையது – திரைலோக்கிய மோகனம்.

முதலாவது சக்கரத்தில் ஒன்றாவது கோட்டில் 10 தேவதைகள் உள்ளன.
1. அணிமா
2. லகிமா
3. மகிமா
4. ஈசித்துவம்
5. வசித்துவம்
6. பிராகாமியம்
7. புக்தி 
8. இச்சா
9. பிராப்தி
10. சர்வ காம்ய சித்தி

முதலாவது சக்கரத்தில் இரண்டாவது நடுக்கோட்டில் எட்டு தேவிகள் உள்ளனர்.

தேவிகளின் வரிசை
1. பிராம்ஹி 
2. மகேஸ்வரி
3. கௌமாரி
4. வைஷ்ணவி
5. வாராகி
6. மாஹேந்திரி 
7. சாமுண்டா
8. மகாலக்ஷ்மி

முதலாவது சக்கரத்தில் மூன்றாவது கோட்டில்

1. ஸர்வ ஸம்ஷோபினி 
2. ஸர்வ வித்ராவினி
3. ஸர்வ கர்ஷினி 
4. ஸர்வ வசங்கரி
5. ஸர்வோன் மாதினி
6. ஸர்வ மஹாங்குசா 
7. ஸர்வ கேசரி 
8. ஸர்வ பீஜ 
9. ஸர்வ யோனி
10. ஸர்வத் ரிகண்டா

ஸர்வா சாபரி பூரகம் இரண்டாவது சக்கரம்

16 ஆகர்ஷண தேவதைகள் உள்ளனர்
1. காமா கர்ஷினி
2. புத்யா கர்ஷினி 
3. அஹங்காரா கர்ஷினி
4. சப்தா கர்ஷினி
5. ஸ்பர்சா கர்ஷினி
6. ரூபா கர்ஷினி
7. ரஷா கர்ஷினி
8. கந்தா கர்ஷினி
9. சித்தா கர்ஷினி
10. தைர்யா கர்ஷினி
11. ஸம்ருத்யா  கர்ஷினி
12. நாமா கர்ஷினி
13. பீஜா கர்ஷினி
14. ஆத்மா கர்ஷினி
15. அம்ருதா  கர்ஷினி
16. சரிரா கர்ஷினி

image: ta.wikipedia.org

இவர்களில் மூன்றாவது உள்ள அஹங்காரா கர்ஷினி சக்தி தான்
ஸ்ரீ மகா பிரத்தியங்கிரா தேவி. ஸ்ரீ நரசிம்ம சுவாமியின் உக்ர குணத்தை தன்னிடம்ஆகர்ஷணம் செய்வித்து, அவரை சாந்தப்படுத்தியவள்.

ஸ்ரீ விநாயகரின் மந்திரங்களும் மற்றும் ஸ்ரீ வாஞ்சா கல்பலதா கணபதியின் பெருமைகளும்

ஸ்ரீ சக்கரம்: பாகம் – 1


ஸ்ரீ என்றால் பெருமைசக்கரம் என்றால் சித்தியான தேவதையின் இருப்பிடம்பிந்து முக்கோணம், 8 கோணம் இரண்டு 10  கோணங்கள்,16  கோணம், 8 தளம், 16 தளம், 3 வட்டம், 3 கோட்டுப்பூபுரம் . இந்த அமைப்பில் உள்ளதே ஸ்ரீ சக்ரம் இந்த சக்கரத்தில் மேல்நோக்கி உள்ள சிவ சக்கரங்கள் 4,  கீழ்நோக்கி உள்ள சக்தி சக்கரங்கள் 5,  9 சக்கரங்கள்.  இதில் முக்கோணம், 8 கோணம் இரண்டு 10 கோணங்கள் ,16 கோணங்கள் ஆகியவை அனைத்தும் சக்திக்குரிய சக்கரங்கள்பிந்து, 8  இதழ் தாமரை,  16  இதழ்த் தாமரை,  4 கோட்டம் இவை சிவனுக்குரிய சக்கரங்களாகும்.
இந்த ஸ்ரீ சக்கரத்தில் பரதேவதை தன்னுடைய ஆவரண தேவதைகள்பரிவார தேவதைகள் என சுமார் 64 கோடி தேவதைகளுடன் 9 சக்கரங்களிலும் வாசம் செய்கிறாள்.  இன்னும் கணேசர்நவகிரகங்கள்,  27 நட்சத்திர தேவதைகள், 12 ராசி தேவதைகள், 51 பீட தேவதைகள் ஆகியோர்களும் ஸ்ரீசக்ரத்தில் வசிப்பதாக தேவி புஜங்கத்தில்  விவரிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ சக்கரத்தில் உள்ள ஒன்பது முக்கோணங்களுக்குள் 43முக்கோணங்கள் உள்ளன.
கோணங்களின் பெயர்கள்:
1. திரைலோக்கிய மோகனம்
2. சர்வா சாபரி  பூரகம்
3. சர்வ ஸம்ஷோபணம் 
4. சர்வ சௌபாக்கிய தாயகம்
5. சர்வார்த்த சாதகம்
6. சர்வ ரக்ஷா கரம்
7. சர்வ ரோஹஹரம் 
8. சர்வ சித்தி ப்ரதாயகம்