thiruvasagam in tamil

திருவாசகம் குழைத்த பத்து

வேண்டத் தக்கது அறிவோய் நீ வேண்ட முழுதும் தருவோய் நீ
வேண்டும் அயன் மாலுக்கு அரியோய் நீ வேண்டி என்னைப் பணிகொண்டாய்
வேண்டி நீ யாது அருள் செய்தாய், யானும் அதுவே வேண்டின் அல்லால்,
வேண்டும் பரிசு ஒன்று உண்டு என்னில் அதுவும் உன் தன் விருப்பு அன்றே.

திருவாசகம் அற்புதப் பத்து

இப் பிறப்பினில் இணை மலர் கொய்து நான் இயல்பொடு அஞ்சு எழுத்து ஓதித்
தப்பு இலாது பொன் கழல்களுக்கு இடாது நான் தட முலையார் தங்கள்
மைப்பு உலாம் கண்ணால் ஏறுண்டு கிடப்பேனை மலர் அடி இணை காட்டி
அப்பன் என்னை வந்து ஆண்டுகொண்டு அருளிய அற்புதம் அறியேனே.

திருவாசகம் அருள் பத்து

முத்தனே முதல்வா முக்கணா முனிவா
மொட்டு அறா மலர் பறித்து இறைஞ்சிப்
பத்தியாய் நினைந்து பரவுவார் தமக்குப்
பரகதி கொடுத்து அருள்செய்யும்
சித்தனே செல்வத் திருப்பெருந்துறையில்
செழும் மலர்க் குருந்தம் மேவிய சீர்
அத்தனே அடி யேன் ஆதரித்து அழைத்தால்
அதெந்துவே என்று அருளாயே.

திருவாசகம் திருச்சதகம் காருண்யத்திரங்கல்

போற்றி ஓம் நமச்சிவாய
புயங்கனே மயங்கு கின்றேன்
போற்றி ஓம் நமச்சிவாய
புகல் இடம் பிறிது ஒன்று இல்லை
போற்றி ஓம் நமச்சிவாய
புறம் எனைப் போக்கல் கண்டாய்
போற்றி ஓம் நமச்சிவாய
சய சய போற்றி போற்றி.