வாராஹிக்குரிய மந்திரங்களும் ஸ்லோகங்களும்

தியான ஸ்லோகம்
வந்தே வாராஹ வக்த்ராம் வர மணி மகுடம் வித்ரும ஸ்தோத்ர பூஷாம்
ஹார க்ரைவேய துங்க ஸ்தந பரநமிதாம் பீத கௌஸேய வஸ்த்ராம்
தேவீம் தக்ஷோர்த் ஹஸ்தே முஸல மத வரம் லாங்க லம் வா கபாலம்
வாமாப் யாம் தாரயந்தீம் குவலய கலிதாம் ஸ்யாமளாம் ஸூப்ரஸன்னாம்   
  
ஸ்ரீ வாராஹி காயத்ரி மந்திரம்

ஓம் மகிஷத்வஜாயை வித்மஹே தண்டஹஸ்தாயை தீமஹி
தந்நோ வாராகி ப்ரசோதயாத்

வாராஹி அஷ்டோத்திரம்

   

ஓம் நமோ வராஹவத³நாயை நமஹ
ஓம் நமோ வாராஹ்யை நமஹ
ஓம் வரரூபிண்யை நமஹ
ஓம் க்ரோடா³நநாயை நமஹ
ஓம் கோலமுக்²யை நமஹ
ஓம் ஜக³த³ம்பா³யை நமஹ
ஓம் தருண்யை நமஹ
ஓம் விஶ்வேஶ்வர்யை நமஹ
ஓம் ஶங்கி²ந்யை நமஹ
ஓம் சக்ரிண்யை நமஹ
ஓம் க²ட்³க³ஶூலக³தா³ஹஸ்தாயை நமஹ
ஓம் முஸலதா⁴ரிண்யை நமஹ
ஓம் ஹலஸகாதி³ ஸமாயுக்தாயை நமஹ
ஓம் ப⁴க்தாநாமப⁴யப்ரதா³யை நமஹ
ஓம் இஷ்டார்த²தா³யிந்யை நமஹ
ஓம் கோ⁴ராயை நமஹ
ஓம் மஹாகோ⁴ராயை நமஹ
ஓம் மஹாமாயாயை நமஹ
ஓம் வார்தால்யை நமஹ
ஓம் ஜக³தீ³ஶ்வர்யை நமஹ ॥ 20॥
ஓம் அந்தே⁴ அந்தி⁴ந்யை நமஹ
ஓம் ருந்தே⁴ ருந்தி⁴ந்யை நமஹ
ஓம் ஜம்பே⁴ ஜம்பி⁴ந்யை நமஹ
ஓம் மோஹே மோஹிந்யை நமஹ
ஓம் ஸ்தம்பே⁴ ஸ்தம்பி⁴ந்யை நமஹ
ஓம் தே³வேஶ்யை நமஹ
ஓம் ஶத்ருநாஶிந்யை நமஹ
ஓம் அஷ்டபு⁴ஜாயை நமஹ
ஓம் சதுர்ஹஸ்தாயை நமஹ
ஓம் உந்நதபை⁴ரவாங்க³ஸ்தா²யை நமஹ
ஓம் கபிலாலோசநாயை நமஹ
ஓம் பஞ்சம்யை நமஹ
ஓம் லோகேஶ்யை நமஹ
ஓம் நீலமணிப்ரபா⁴யை நமஹ
ஓம் அஞ்ஜநாத்³ரிப்ரதீகாஶாயை நமஹ
ஓம் ஸிம்ஹாருத்³ராயை நமஹ
ஓம் த்ரிலோசநாயை நமஹ
ஓம் ஶ்யாமலாயை நமஹ
ஓம் பரமாயை நமஹ
ஓம் ஈஶாந்யை நமஹ
ஓம் நீல்யை நமஹ
ஓம் இந்தீ³வரஸந்நிபா⁴யை நமஹ
ஓம் கணஸ்தா²நஸமோபேதாயை நமஹ
ஓம் கபிலாயை நமஹ
ஓம் கலாத்மிகாயை நமஹ
ஓம் அம்பி³காயை நமஹ
ஓம் ஜக³த்³தா⁴ரிண்யை நமஹ
ஓம் ப⁴க்தோபத்³ரவநாஶிந்யை நமஹ
ஓம் ஸகு³ணாயை நமஹ
ஓம் நிஷ்கலாயை நமஹ
ஓம் வித்³யாயை நமஹ
ஓம் நித்யாயை நமஹ
ஓம் விஶ்வவஶங்கர்யை நமஹ
ஓம் மஹாரூபாயை நமஹ
ஓம் மஹேஶ்வர்யை நமஹ
ஓம் மஹேந்த்³ரிதாயை நமஹ
ஓம் விஶ்வவ்யாபிந்யை நமஹ
ஓம் தே³வ்யை நமஹ
ஓம் பஶூநாமப⁴யகாரிண்யை நமஹ
ஓம் காலிகாயை நமஹ
ஓம் ப⁴யதா³யை நமஹ
ஓம் ப³லிமாம்ஸமஹாப்ரியாயை நமஹ
ஓம் ஜயபை⁴ரவ்யை நமஹ
ஓம் க்ருʼஷ்ணாங்கா³யை நமஹ
ஓம் பரமேஶ்வரவல்லபா⁴யை நமஹ
ஓம் நுதா³யை நமஹ
ஓம் ஸ்துத்யை நமஹ
ஓம் ஸுரேஶாந்யை நமஹ
ஓம் ப்³ரஹ்மாதி³வரதா³யை நமஹ
ஓம் ஸ்வரூபிண்யை நமஹ
ஓம் ஸுராநாமப⁴யப்ரதா³யை நமஹ
ஓம் வராஹதே³ஹஸம்பூ⁴தாயை நமஹ
ஓம் ஶ்ரோணிவாராலஸே நமஹ
ஓம் க்ரோதி⁴ந்யை நமஹ
ஓம் நீலாஸ்யாயை நமஹ
ஓம் ஶுப⁴தா³யை நமஹ
ஓம் ஶுப⁴வாரிண்யை நமஹ
ஓம் ஶத்ரூணாம் வாக்ஸ்தம்ப⁴நகாரிண்யை நமஹ
ஓம் கடிஸ்தம்ப⁴நகாரிண்யை நமஹ
ஓம் மதிஸ்தம்ப⁴நகாரிண்யை நமஹ
ஓம் ஸாக்ஷீஸ்தம்ப⁴நகாரிண்யை நமஹ
ஓம் மூகஸ்தம்பி⁴ந்யை நமஹ
ஓம் ஜிஹ்வாஸ்தம்பி⁴ந்யை நமஹ
ஓம் து³ஷ்டாநாம் நிக்³ரஹகாரிண்யை நமஹ
ஓம் ஶிஷ்டாநுக்³ரஹகாரிண்யை நமஹ
ஓம் ஸர்வஶத்ருக்ஷயகராயை நமஹ
ஓம் ஶத்ருஸாத³நகாரிண்யை நமஹ
ஓம் ஶத்ருவித்³வேஷணகாரிண்யை நமஹ
ஓம் பை⁴ரவீப்ரியாயை நமஹ
ஓம் மந்த்ராத்மிகாயை நமஹ
ஓம் யந்த்ரரூபாயை நமஹ
ஓம் தந்த்ரரூபிண்யை நமஹ
ஓம் பீடா²த்மிகாயை நமஹ
ஓம் தே³வதே³வ்யை நமஹ
ஓம் ஶ்ரேயஸ்காரிண்யை நமஹ
ஓம் சிந்திதார்த²ப்ரதா³யிந்யை நமஹ
ஓம் ப⁴க்தாலக்ஷ்மீவிநாஶிந்யை நமஹ
ஓம் ஸம்பத்ப்ரதா³யை நமஹ
ஓம் ஸௌக்²யகாரிண்யை நமஹ
ஓம் பா³ஹுவாராஹ்யை நமஹ
ஓம் ஸ்வப்நவாராஹ்யை நமஹ
ஓம் ப⁴க³வத்யை நமோ நமஹ
ஓம் ஈஶ்வர்யை நமஹ
ஓம் ஸர்வாராத்⁴யாயை நமஹ
ஓம் ஸர்வமயாயை நமஹ
ஓம் ஸர்வலோகாத்மிகாயை நமஹ
ஓம் மஹிஷநாஶிநாயை நமஹ
ஓம் ப்³ருʼஹத்³வாராஹ்யை நமஹ
இதி வாராஹ்யஷ்டோத்தரஶதநாமாவளி: ஸம்பூர்ணா

செல்வம் சேர மஹா வாராஹி மந்திரம்

ஓம் க்லீம் வராஹ முகி ஹ்ரீம் ஸித்தி ஸ்வரூபிணி


ஸ்ரீம் தன வசங்கரி தனம் வர்ஷய ஸ்வாஹா


வாராஹி மூலமந்திரம்

ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம்
ஐம் க்லௌம் ஐம்
நமோ பகவதி
வார்த்தாளி வார்த்தாளி
வாராஹி வாராஹி
வராஹமுகி வராஹமுகி
அந்தே அந்தினி நமஹ
ருந்தே ருந்தினி நமஹ
ஜம்பே ஜம்பினி நமஹ
மோஹே மோஹினி நமஹ
ஸ்தம்பே ஸ்தம்பினி நமஹ
ஸர்வதுஷ்ட ப்ரதுஷ்டானாம் ஸர்வேஷாம்
ஸர்வ வாக்சித்த சக்ஷுர்முக
கதி ஜிஹ்வா ஸ்தம்பனம் குரு குரு
ஸீக்ரம் வஸ்யம் ஐம் க்லௌம் ஐம்
ட: ட: ட: ட: ஹும் அஸ்த்ராய பட்   
   
வாராஹி மாலை

இருகுழை கோமளம் தாள் புஷ்பராகம் இரண்டுகண்ணும்
குருமணி நீலம் கை கோமேதகம் நகம் கூர்வயிரம்
திருநகை முத்துக் கனிவாய் பவளம் சிறந்தவல்லி
மரகத நாமம் திருமேனியும் பச்சை மாணிக்கமே.
தோராத வட்டம் முக்கோணம் ஷட்கோணம் துலங்கு வட்டத்து
ஈராறிதழிட்டு ரீங்காரம் உள்ளிட் டது நடுவே
ஆராதனைசெய்து அருச்சித்துப் பூஜித்தடிபணிந்தால்
வாராதிராள் அல்ல வோலை ஞான வாராஹியுமே.
மெய்ச்சிறந்தாற் பணியார் மனம் காயம் மிகவெகுண்டு
கைச்சிரத் தேந்திப் புலால்நிணம் நாறக் கடித்துதறி
வச்சிரத் தந்த முகப்பணியாற் குத்து வாய்கடித்துப்
பச்சிரத்தம்குடிப்பாளே வாராஹி பகைஞரையே.
படிக்கும் பெரும்புகழ்ப் பஞ்சமி அன்பர் பகைஞர்தமை
அடிக்கும் இரும்புத் தடிகொண்டு பேய்கள் அவர்குருதி
குடிக்கும் குடர்கொண்டு தோள்மாலை இட்டுக் குலாவிமன்றில்
நடிக்கும் வாராஹி பதினா லுலகம் நடுங்கிடவே.
நடுங்கா வகைஅன்பர் நெஞ்சினிற் புக்கவர் நண்ணலரைக்
கொடும்காளி உண்ணக் கொடுக்கும் குருதிகள் கொப்பளித் திட்
டிடும்பாராக் கொங்கையின் மீதே இரத்தத் திலகம்இடும்
தொடும்கார் மனோன்மணி வாராஹி நீலி தொழில் இதுவே.
வேய்க்குலம் அன்னதிந்தோனால் வாராஹிதன் மெய்யன்பரை
நோய்க்குலம் என்ன இடும்பு செய்வார்தல நொய்தழித்துப்
பேய்க்குலம் உண்ணப் பலிகொண்டு போட்டுப் பிணக்குடரை
நாய்க்குலம் கௌவக் கொடுப்பாள் வாராஹிஎன் நாரணியே.
நாசப் படுவர் நடுங்கப்படுவர் நமன்கயிற்றால்
வீசப் படுவர் வினையும் படுவரிம் மேதினியோர்
ஏசப் படுவர் இழுக்கும் படுவரென ஏழை நெஞ்சே
வாசப் புதுமலத் த்னாள் வாராஹியை வாழ்த்திலரே
.
வாலை புவனை திரிபுரை மூன்றுமிவ் வையகத்திற்
காலையும் மாலையும் உச்சியும் ஆகஎக் காலத்துமே
ஆலயம் எய்தி வாராஹிதன் பாதத்தை அன்பில் உன்னி
மாலயன் தேவர் முதலான பேர்களும் வாழ்த்துவரே.
வருத்திப் பகைத்தீர் என்னோடறியாமல்முன் வானவர்க்காச
சிரித்துப் புரமெரித்தோன் வாம பாகத்துத் தேவி எங்கள்
கருத்திற் பயிலும் வாராஹிஎன் பஞ்சமி கண்சிவந்தாற்
பருத்திப் பொதிக்கிட்ட தீப்பொறி காணும் பகைத்தவர்க்கே.
பாப்பட்ட செந்தமிழ்ப் பாவாணர் நின்மலர்ப் பாதம் தன்னிற்
பூப்பட்டதும் பொறிப்பட்டதோ? நின்னை யேபுகழ்ந்து
கூப்பிட்ட துன்செவி கேட்கில்லையோ? அண்ட கோளமட்டும்
தீப்பட்ட தோ?பட்டதோ நிந்தை யாளர் தெரு எங்குமே
எங்கும் எரியக் கிரிகள் பொடிபட எம்பகைஞர்
அங்கம் பிளந்திட விண்மன் கிழிந்திட ஆர்த்தெழுந்து
பொங்கும் கடல்கள் சுவறிடச் சூலத்தைப் போகவிட்டுச்
சிங்கத்தின் மீது வருவாள் வாராஹி சிவசக்தியே
.
சக்தி கவுரி மஹமாயி ஆயிஎன் சத்துருவைக்
குத்தி இரணக் குடரைப் பிடுங்கிக் குலாவி நின்றே
இத்திசை எங்கும் நடுங்கக் கிரிகள் இடிபடவே
நித்தம் நடித்து வருவாள் வாராஹிஎன் நெஞ்சகத்தே
.
நெஞ்சகம் தன்னில் நிறைந்திருக் கின்றவன் நிர்க்குணத்தி
நஞ்சணி கண்டத்தி நாரா யணிதனை நம்புதற்கு
வஞ்சனை பண்ணி மதியாத பேரைவாழ் நாளை உண்ணக்
கொஞ்சி நடந்து வருவாள் வாராஹி குலதெய்வமே.
மதுமாமிஸம்தனைத் தின்பாள் இவள் என்று மாமறையோர்
அதுவே உதாஸினம் செய்திடுவார் அந்த அற்பர்கள்தம்
கதிர்வாய் அடைத்திட உள்ளம் கலங்கக் கடித்தடித்து
விதிர் வாளில் வெட்டி எறிவாள் வாராஹின் மெய்த் தெய்வமே.
ஐயும் கிலியும் எனத்தொண்டர் போற்ற அரியபச்சை
மெய்யும் கருணை வழிந்தோடுகின்ற விழியும் மலர்க்
கையும் பிரம்பும் கபாலமும் சூலமும் கணெதிரே
வையம் துதிக்க வாராஹி மலர்க்கொடியே.
தாளும் மனமும் தலையும் குலையத் தரியலர்கள்
மாளும் படிக்கு வரம்தருவாய் உன்னை வாழ்த்தும் அன்பர்
கோளும் பகையும் குறியார்கள் வெற்றி குறித்த சங்கும்
வாளும் கடகமும் சூலமும் ஏந்தி வரும் துணையே!
வருந்துணை என்று வாராஹி என்றன்னையை வாழ்த்தி நிதம்
பொருந்தும் தகைமையைப் பூணா தவர் புலால் உடலைப்
பருந்தும் கழுகும்வெம் பூதமும் வெய்ய பிசாசுகளும்
விருந்துண்ணப் பட்டுக் கிடப்பர்கண்டீர் உடல் வேறுபட்டே.
வேறாக்கும் நெஞ்சும் வினையும் வெவ்வேறு வெகுண்டுடலம்
கூறாக்கும் நெஞ்சத்திற் செந்நிறம் ஆன குருதிபொங்கச்
சேறாக்கும் குங்குமக் கொங்கையிற் பூசும் திலகம் இடும்
மாறாக்கும் நேமிப் படையாள் தலைவணங்காதவர்க்கே.
பாடகச் சீறடிப் பஞ்சை அன்பர் பகைஞர்தமை
ஓடவிட் டே கை உலக்கைகொண் டெற்றி உதிரம் எல்லாம்
கோடகத் திட்டு வடித்தெருத் தூற்றிக் குடிக்கும் எங்கள்
ஆடகக் கும்ப இணைக்கொங்கையாள் எங்கள் அம்பிகையே.
தாமக் குழலும் குழையும் பொன் ஓலையும் தாமரைப்பூஞ்
சேமக் கழலும் திதிக்கவந்தோர்க்கு ஜெகம் அதனில்
வாமக் கரள் களத்தம்மை ஆதி வாராஹிவந்து
தீமைப் பவத்தைக் கெடுத்தாண்டு கொள்வாள் சிவசக்தியே.
ஆராகிலும் நமக்கேவினை ச்ய்யின் அவருடலும்
கூராகும் வாளுக் கிரைஇடுவாள் கொன்றை வேணிஅரன்
சீரார் மகுடத் தடி இணை சேர்க்கும் திரிபுரையாள்
வாராஹி வந்து குடி இருந்தாள் என்னை வாழ்விக்கவே.
தரிப்பாள் கலப்பை என் அம்மை வாராஹிஎன் சத்துருவைப்
பொரிப்பாள் பொறிஎழச் செந்தீயில் இட்டு பொரிந்த் ததலை
நெரிப்பாள் தலைமண்டை மூளையத் தின்றுபின் நெட்டுடலை
உரிப்பாள் படுக்க விரிப்பாள்கக்காக உலர்த்துவளே.
ஊரா கிலுமுடன் நாடா கிலும் அவர்க் குற்றவரோடு
பாரா கிலும் நமக் காற்றுவரோ? அடலாழி உண்டு
காரார் கருத்த உலக்கையும் உண்டு கலப்பை உண்டு
வாராஹி என்னும்மெய்ச் சண்டப் ப்ரசண்ட வடிவிஉண்டே.
உலக்கை கலப்பை ஒளிவிடு வாள்கட காழிசங்கம்
வலக்கை இடக்கையில் வைத்த வாராஹிஎன் மாற்றலர்கள்
இலக்கம் இல்லாத எழிற்பெரும் சேனை எதிர்வரினும்
விலக்கவல்லாள் ஒரு மெல்லிதன் பாதம் விரும்புகவே.
தஞ்சம்உன் பாதம் சரணா கதிஎன்று சார்ந்தவர்மேல்
வஞ்சனை பில்லி கொடிதேவல் சூனியம் வைத்தவரை
நெஞ்சம் பிளந்து நிணக்குடல் வாங்கி நெருப்பினிலிட்டு
அஞ்சக் கரங்கொண் டறுப்பாள் திரிபுரை ஆனந்தியே.
அலைபட்டு நெஞ்சம் அலைந்துயிர் சோர அலகைக் கையால்
கொலைபட் டுடலம் கழுகுகள் சூழக் குருதி பொங்கித்
தலைகெட்டவயவம் வேறாய்ப் பதைப்புற்றுச் சாவர்கண்டீர்
நிலைபெற்ற நேமிப் படையாள் தனை நினை யாதவரே.
சிந்தை தெளிந்துனை வாழ்த்திப் பணிந்து தினம் துதித்தே
அந்திபகல் உன்னை அர்ச்சித்தபேரை அசிங்கியமாய்
நிந்தனை பண்ணி மதியாத உலுத்தர் நிணம் அருந்திப்
புந்தி மகிழ்ந்து வருவாய் வாராஹி நற் பொற்கொடியே.
பொருப்புக்கு மாறுசெய் ஆழியும் தோடும் பொருப்பைவென்ற
மருப்புக்கு நேர்சொலும் கொங்கையும் மேனியும் வாழ்த்துமெனது
இருப்புக் கடிய மனதிற் குடிகொண்டு எதிர்த்தவரை
நெருப்புக் குவாலெனக் கொல்வாய் வாராஹி என் நிர்க்குணியே.
தேறிட்ட நின்மலர்ப் பாதார விந்தத்தைச் சிந்தை செய்து
நீறிட்டவர்க்கு வினை வருமோ? நின் அடியவர்பால்
மாறிட்டவர்தமை வாள் ஆயுதம்கொண்டு வாட்டி இரு
கூறிட் டெறிய வருவாய் வாராஹி குல தெய்வமே.
நரிபரி ஆக்கிய சம்புவின் பாகத்தை நண்ணியமான்
அரிஅயன் போற்றும் அபிராமி தன் அடியார்க்கு முன்னே
ஸரியாக நின்று தருக்கம் செய் மூடர் தலையை வெட்டி
எரியாய் எரித்து விடுவாள் வாராஹி எனும் தெய்வமே.
வீற்றிருப்பான் நவ கோணத்திலே நம்மை வேண்டும் என்று
காத்திருப்பாள்கலி வந்தணுகாமல் என் கண்கலக்கம்
பார்த்திருப்பாள் அல்லள் எங்கேஎன்றங்குச பாசம் கையில்
கோத்திருப்பாள் இவளே என்னை ஆளும் குலதெய்வமே.
சிவஞான போதகி செங்கைக் கபாலி தகம்பரி நல்
தவம் ஆரும் மெய்யன்பர்க் கேஇடர் சூழும் தரியலரை
அவமானம் செய்யக் கணங்களை ஏவும் அகோரி இங்கு
நலமாக வந்தெனைக் காக்கும் திரிபுர நாயகியே.