தீபம் ஏற்றும் போதும் பிரதக்ஷணம் செய்யும் போதும் சொல்ல வேண்டிய ஸ்லோகங்கள்
சுபம் கரோதி கல்யாணம் ஆரோக்யம் தன சம்பத:
சத்ரு புத்தி விநாசய தீப ஜோதி நமோஸ்துதே
தீபஜோதி பரபிரம்மா தீபஜோதி ஜனார்தனா
தீபோ மே ஹரது பாபம் சந்த்யா தீப நமோஸ்துதே
சுபம் பவது கல்யாணி ஆயுர் ஆரோக்ய ஸம்பதாம்
மம சத்ரு விநாசாய தீப ஜோதி நமோஸ்துதே
திருவிளக்கு அர்ச்சனை
1. பொன்னும் மெய்ப்பொருளும் தருவாய் போற்றி
2. போகமும் திருவும் புணர்ப்பாய் போற்றி
3. முற்றறிவு ஒளியாய் மிளிர்ந்தாய் போற்றி
4. மூவுலகும் நிறைந்திருந்தாய் போற்றி
5. வரம்பில் இன்பமாய் வளர்ந்திருந்தாய் போற்றி
6. இயற்கையாய் அறிவொளி ஆனாய் போற்றி
7. ஈரேழுலகும் ஈன்றாய் போற்றி
8. பிறர் வயமாகாப் பெரியோய் போற்றி
9. பேரின்பப் பெருக்காய் பொலிந்தாய் போற்றி
10. பேரருள் கடலாம் பொருளே போற்றி
11. முடிவில் ஆற்றல் உடையாய் போற்றி
12. மூவுலகும் தொழ மூத்தோய் போற்றி
13. அளவிலாச் செல்வம் தருவாய் போற்றி
14. ஆனந்த அறிவொளி விளக்கே போற்றி
15. ஓமெனும் பொருளாய் உள்ளோய் போற்றி
16. இருள்கெடுத்து இன்பருள் ஈந்தாய் போற்றி
17. மங்கள நாயகி மாமணி போற்றி
18. வளமை நல்கும் வல்லியே போற்றி
19. அறம்வளர் நாயகி அம்மையே போற்றி
20. மின்னொளி அம்மையாம் விளக்கே போற்றி
21. மண்ஒளிப் பிழம்பாய் வளர்ந்தாய் போற்றி
22. தையல்நாயகித் தாயே போற்றி
23. தொண்டர்கள் அகத்தமர் தூமணி போற்றி
24. முக்கண் சுடரின் முதல்வி போற்றி
25. ஒளிக்குள் ஒளியாய் உயர்வாய் போற்றி
26. சூளாமணியே சுடரொளி போற்றி
27. இருளொழித்து இன்பமும் ஈவோய் போற்றி
28. அருள்மொழிந்து எம்மை ஆள்வோய் போற்றி
29. அறிவினிக்கு அறிவாய் ஆனாய் போற்றி
30. இல்லக விளக்காம் இறைவி போற்றி
31. சுடரே விளக்காம் தூயோய் போற்றி
32. இடரைக் களையும் இயல்பினாய் போற்றி
33. எரிசுடராய் நின்ற இறைவி போற்றி
34. ஞானச்சுடர் விளக்காய் நின்றாய் போற்றி
35. அருமறை பொருளாம் ஆதி போற்றி
36. தூண்டுசுடர் அனைய ஜோதி போற்றி
37. ஜோதியே போற்றி சுடரே போற்றி
38. ஓதும் உள்ளொளி விளக்கே போற்றி
39. இருள் கெடுக்கும் இல்லக விளக்கே போற்றி
40. சொல்லாக விளக்காம் ஜோதி போற்றி
41. பலர்காண் பல்லக விளக்கே போற்றி
42. நல்லக நமச்சிவாய விளக்கே போற்றி
43. உவப்பிலா ஒளிவளர் விளக்கே போற்றி
44. உணர்வு சூழ் கடந்தோர் விளக்கே போற்றி
45. உடம்பெனும் மனையாக விளக்கே போற்றி
46. உள்ளத்தகழி விளக்கே போற்றி
47. மடம்படு உணர்நெய் விளக்கே போற்றி
48. உயிரெனும் திரிமயக்கு விளக்கே போற்றி
49. இடர்படும் ஞானத்தீ விளக்கே போற்றி
50. நோக்குவார்க்கு எரிகொள் விளக்கே போற்றி
51. ஆதியாய் நடுவுமாகும் விளக்கே போற்றி
52. அளவில்லா அளவுமாகும் விளக்கே போற்றி
53. ஜோதியாய் உணர்வுமாகும் விளக்கே போற்றி
54. தில்லைப் பொதுநட விளக்கே போற்றி
55. கற்பனை கடந்த ஜோதி போற்றி
56. கருணை உருவாம் விளக்கே போற்றி
57. அற்புதக் கோல விளக்கே போற்றி
58. அருமறைச் சிரத்து விளக்கே போற்றி
59. சிற்பர வ்யோம விளக்கே போற்றி
60. பொற்புடன் நடம்செய் விளக்கே போற்றி
61. உள்ளத்து இருளை ஒழிப்பாய் போற்றி
62. கள்ளப் புலனைக் கரைப்பாய் போற்றி
63. உருகுவோர் உள்ளத்து ஒளியே போற்றி
64. பெருக அருள் சுரக்கும் பெரும போற்றி
65. இருள்சேர் இருவினை எரிவாய் போற்றி
66. அருவே உருவே அருவுருவே போற்றி
67. நந்தா விளக்கே நாயகி போற்றி
68. செந்தாமரைத் தாள் தந்தாய் போற்றி
69. தீப மங்கள ஜோதி போற்றி .
70. மதிப்பவர் மாமணி விளக்கே போற்றி
71. பாகம் பிரியா பராபரை போற்றி
72. ஆகம முடிமேல் அமர்ந்தாய் போற்றி
73. ஏகமுகம் நடம்செய் எம்மான் போற்றி
74. ஊழிஊழி உள்ளோய் போற்றி
75. ஆழியான் காணா அடியோய் போற்றி
76. ஆதியும் அந்தமும் அற்றாய் போற்றி
77. அந்தமில் இன்பம் அருள்வோய் போற்றி
78. முந்தை வினையை முடிப்போய் போற்றி
79. பொங்கும் கீர்த்தி பூரணி போற்றி
80. தன்னருள் சுரக்கும் தாயே போற்றி
81. அருளே உருவாய் அமைந்தோய் போற்றி
82. இருநில மக்கள் இறைவி போற்றி
83. குருவென ஞானம் கொடுப்போய் போற்றி
84. ஆறுதல் எமக்கிங்கு அளிப்பாய் போற்றி
85. தீதெலாம் தீர்க்கும் திருவே போற்றி
86. பக்தியில் ஆழ்ந்த பரமே போற்றி
87. எத்திக்கும் துதி ஏய்ந்தாய் போற்றி
88. அஞ்சேல் என்றருளும் அன்பே போற்றி
89. தஞ்சம் என்றவரை சார்வோய் போற்றி
90. ஓதுவார் அகத்துறை ஒளியே போற்றி
91. ஓங்காரத்து உள்ளொளி விளக்கே போற்றி
92. எல்லா உலகமும் ஆனாய் போற்றி
93. பொல்லா வினைகள் அறுப்பாய் போற்றி
94. புகழ்சேவடி என்மேல் வைத்தோய் போற்றி
95. செல்வாய் செல்வம் தருவாய் போற்றி
96. பூங்கழல் விளக்கே போற்றி
97. உலகம் உவப்புற வாழ்வருள் போற்றி
98. உயிர்களின் பசிப்பிணி ஒழித்தருள் போற்றி
99. செல்வம் கல்வி சிறப்பருள் போற்றி
100. நல்லன்பு ஒழுக்கம் நல்குக போற்றி
101. விளக்கிட்டார்க்கு மெய்நெறி விளக்குவாய் போற்றி
102. நலமெலாம் உயிர்க்கு நல்குக போற்றி
103. தாயே நின்னருள் தந்தாய் போற்றி
104. தூய நின்திருவடி தொழுதனம் போற்றி
105. போற்றி என்பார் அமரர் விளக்கே போற்றி
106. போற்றி என்பார் மனிதர் விளக்கே போற்றி
107. போற்றிஎன் அன்பொளி விளக்கே போற்றி
108. போற்றி போற்றி திருவிளக்கே போற்றி
திருவிளக்கு ஸ்தோத்ரம்
விளக்கே திரு விளக்கே
வேந்தன் உடன் பிறப்பே
ஜோதி மணி விளக்கே
ஸ்ரீதேவி பொன்மணியே
அந்தி விளக்கே அலங்கார நாயகியே
காந்தி விளக்கே காமாட்சி தாயாரே
பசும்பொன் விளக்கு வைத்து பஞ்சு திரி போட்டு
குளம் போல எண்ணெய் விட்டு கோலமுடன் ஏற்றினேன்
ஏற்றினேன் திருவிளக்கு எந்தன் குடி விளங்க
வைத்தேன் திருவிளக்கு மாளிகையும் தான் விளங்க
மாளிகையில் ஜோதியுள்ள மாதாவை கண்டு மகிழ்ந்தேன் யான்
மாங்கல்ய பிச்சை மடிபிச்சை தாருமம்மா
சந்தான பிச்சையுடன் தனம்களும் தாருமம்மா
பெட்டி நிறைய பூஷணங்கள் தாருமம்மா
பட்டி நிறைய பால் பசுவை தாருமம்மா
கொட்டகை நிறைய குதிரைகள் தாருமம்மா
புகழுடம்பை தாருமம்மா , பக்கத்திலேநில்லுமம்மா
சேவித்து எழுந்திருந்தேன் , தேவிவடிவம் கண்டேன்
வஜ்ரா கிரீடம் கண்டேன்
வைடூர்ய மேனி கண்டேன் முது பச்சை கண்டேன்
முழு பச்சை மாலை கண்டேன்
சவுரி முடி கண்டேன் , தாழைமடல் சூடக்கண்டேன்
சாந்துடன் நெற்றி கண்டேன் , தாயார்வடிவம் கண்டேன்
கமல திருமுகத்தில் கஸ்தூரி பொட்டு கண்டேன்
மார்பில் பதக்கம் மின்ன மாலை அசைய கண்டேன்
கை வளையல் கலகலவென கணையாழி மின்ன கண்டேன்
காலிற் சிலம்பு கண்டேன் , காலாயிபீலிகண்டேன்
மங்கள நாயகியை மனம் குளிர கண்டு மகிழ்ந்தேன் நான்
அன்னையே அரும்துனையே , அருகிருந்துகாருமம்மா
வந்த வினையகற்றி மஹா பாக்கியம் தாருமம்மா
தாயாரே சரணம் என்றேன் , உன்தாளடியில் நான் பணிந்தேன்
திருவிளக்கு போற்றிகள்
1) ஓம் சிவாயை போற்றி
2) ஓம் சிவசக்தியே போற்றி
3) ஓம் இச்சா சக்தியே போற்றி
4) ஓம் கிரியா சக்தியே போற்றி
5) ஓம் பொன்னுருவே போற்றி
6) ஓம் தீப லக்ஷ்மி போற்றி
7) ஓம் மஹாலக்ஷ்மி போற்றி
8) ஓம் தனலக்ஷ்மி போற்றி
9) ஓம் காமாக்ஷி சுந்தரி போற்றி
10) ஓம் சுபந்தரும் லக்ஷ்மி போற்றி
11) ஓம் ராஜ லக்ஷ்மி போற்றி
12) ஓம் வீட்டினை விளங்கவைக்கும் லக்ஷ்மி போற்றி
13) ஓம் உள்ளத்தில் உறையும் லக்ஷ்மி போற்றி
14) ஓம் சீதா லக்ஷ்மி போற்றி
15) ஓம் முப்புர லக்ஷ்மி போற்றி
16) ஓம் சர்வமங்களங்களும் தருபவளே போற்றி
17) ஓம் சகல துக்கங்களையும் நிவர்த்திக்கும் சக்தியே போற்றி
18) ஓம் மோனவடிவான முதல்வீ போற்றி
19) ஓம் தானிய லக்ஷ்மி போற்றி
20) ஓம் தைரிய லக்ஷ்மி போற்றி
21) ஓம் வீரலக்ஷ்மி போற்றி
22) ஓம் விஜயலக்ஷ்மி போற்றி
23) ஓம் வித்யாலக்ஷ்மி போற்றி
24) ஓம் ஜெயலக்ஷ்மி போற்றி
25) ஓம் வரலக்ஷ்மி போற்றி
26) ஓம் கஜலக்ஷ்மி போற்றி
27) ஓம் ஸர்வஅவயவ சுந்தரி போற்றி
28) ஓம் சௌபாக்ய லக்ஷ்மி போற்றி
29) ஓம் நவகோளின் நாயகி போற்றி
30) ஓம் உலக நாயகி போற்றி
31) ஓம் அலங்கார நாயகி போற்றி
32) ஓம் ஆனந்த வடிவமே போற்றி
33) ஓம் உலகாண்ட நாயகி போற்றி
34) ஓம் பிரமாண்ட நாயகி போற்றி
35) ஓம் சத்திய வடிவம் கொண்டதாயே போற்றி
36) ஓம் ஞான வடிவாம் நற்றாயே போற்றி
விநாயகர் அர்ச்சனை நாமாவளிகள்
1) ஓம் ஸுமுகாய நமஹ
2) ஓம் ஏக தந்தாய நமஹ
3) ஓம் கபிலாய நமஹ
4) ஓம் கஜகர்ணகாய நமஹ
5) ஓம் லம்போதராய நமஹ
6) ஓம் விகடாய நமஹ
7) ஓம் விக்கனராஜாய நமஹ
8) ஓம் விநாயகாய நமஹ
9) ஓம் தூமகேதவே நமஹ
10) ஓம் கணுத்த்யக்ஷாய நமஹ
11) ஓம் பாலசந்த்ராய நமஹ
12) ஓம் கஜானனுய நமஹ
13) ஓம் வக்ரதுண்டாய நமஹ
14) ஓம் சூர்ப்பகர்ணுய நமஹ
15) ஓம் ஹேரம்பாய நமஹ
16) ஓம் ஸ்கந்தபூர்வஜாய நமஹ
17) ஓம் ஸித்தி விநாயக ஸ்வாமினே நமஹ
நானாவித பரிமள புஷ்பாணி ஸமர்ப்பயாமி
மஹாலக்ஷ்மி அஷ்டோத்திரம்
1) ஓம் ப்ரக்ருத்யை நம
2) ஓம் விக்ருத்யை நம
3) ஓம் வித்யாயை நம
4) ஓம் ஸர்வ பூதஹிதப்ரதாயை நம
5) ஓம் ச்ரத்தாயை நம
6) ஓம் விபூத்யை நம
7) ஓம் ஸுரப்யை நம
8) ஓம் பரமாத்மிகாயை நம
9) ஓம் வாசே நம
10) ஓம் பத்மாலயாயை நம
11) ஓம் பத்மாயை நம
12) ஓம் சுசயே நம
13) ஓம் ஸ்வாஹாயை நம
14) ஓம் ஸ்வதாயை நம
15) ஓம் ஸுதாயை நம
16) ஓம் தன்யாயை நம
17) ஓம் ஹிரண் மய்யை நம
18) ஓம் லக்ஷ்ம்யை நம
19) ஓம் நித்ய புஷ்டாயை நம
20) ஓம் விபாவர்யை நம
21) ஓம் அதித்யை நம
22) ஓம் தித்யை நம
23) ஓம் தீப்தாயை நம
24) ஓம் வஸுதாயை நம
25) ஓம் வஸுதாரிண்யை நம
26) ஓம் கமலாயை நம
27) ஓம் காந்தாயை நம
28) ஓம் காமாயை நம
29) ஓம் க்ஷிரோதஸம்ப வாயை நம
30) ஓம் அனுக்ரஹபதாயை நம
31) ஓம் புத்யை நம
32) ஓம் அநகாயை நம
33) ஓம் ஹரிவல்லபாயை நம
34) ஓம் அசோகாயை நம
35) ஓம் அம்ருதாயை நம
36) ஓம் தீப்தாயை நம
37) ஓம் லோக சோக விநாசிந்யை நம
38) ஓம் தர்ம நிலயாவை நம
39) ஓம் கருணாயை நம
40) ஓம் லோகமாத்ரே நம
41) ஓம் பத்மப்ரியாயை நம
42) ஓம் பத்மஹஸ்தாயை நம
43) ஓம் பத்மாக்ஷ்யை நம
44) ஓம் பத்மஸுந்தர்யை நம
45) ஓம் பக்மோத்பவாயை நம
46) ஓம் பக்த முக்யை நம
47) ஓம் பத்மனாப ப்ரியாயை நம
48) ஓம் ரமாயை நம
49) ஓம் பத்ம மாலாதராயை நம
50) ஓம் தேவ்யை நம
51) ஓம் பத்மிந்யை நம
52) ஓம் பத்மகந்திந்யை நம
53) ஓம் புண்யகந்தாயை நம
54) ஓம் ஸுப்ரஸந்நாயை நம
55) ஓம் ப்ரஸாதாபி முக்யை நம
56) ஓம் ப்ரபாயை நம
57) ஓம் சந்த்ரவதநாயை நம
58) ஓம் சந்த்ராயை நம
59) ஓம் சந்த்ர ஸஹோதர்யை நம
60) ஓம் சதுர்ப் புஜாயை நம
61) ஓம் சந்த்ர ரூபாயை நம
62) ஓம் இந்திராயை நம
63) ஓம் இந்து சீதலாயை நம
64) ஓம் ஆஹ்லாத ஜநந்யை நம
65) ஓம் புஷ்ட்யை நம
66) ஓம் சிவாயை நம
67) ஓம் சிவகர்யை நம
68) ஓம் ஸத்யை நம
69) ஓம் விமலாயை நம
70) ஓம் விச்ய ஜநந்யை நம
71) ஓம் புஷ்ட்யை நம
72) ஓம் தாரித்ர்ய நாசிந்யை நம
73) ஓம் ப்ரீதி புஷ்கரிண்யை நம
74) ஓம் சாந்தாயை நம
75) ஓம் சுக்லமாம்யாம்பரரயை நம
76) ஓம் ச்ரியை நம
77) ஓம் பாஸ்கர்யை நம
78) ஓம் பில்வ நிலாயாயை நம
79) ஓம் வராய ரோஹாயை நம
80) ஓம் யச்சஸ் விந்யை நம
81) ஓம் வாஸுந்தராயை நம
82) ஓம் உதா ராங்காயை நம
83) ஓம் ஹரிண்யை நம
84) ஓம் ஹேமமாலின்யை நம
85) ஓம் த ந தாந்யகர்யை நம
86) ஓம் ஸித்தயே நம
87) ஓம் ஸத்ரைணஸெம்யாயை நம
88) ஓம் சுபப்ரதாயை நம
89) ஓம் ந்ருப வேச்மகதாநந்தாயை நம
90) ஓம் வரலக்ஷம்யை நம
91) ஓம் வஸுப்ரதாயை நம
92) ஓம் சுபாயை நம
93) ஓம் ஹிரண்ய ப்ராகாராயை நம
94) ஓம் ஸமுத்ர தநயாயை நம
95) ஓம் ஜயாயை நம
96) ஓம் மங்கள தேவதாயை நம
97) ஓம் விஷ்ணு வக்ஷஸதலஸ்தி நம
98) ஓம் விஷ்ணு பத்ந்யை தாயை நம
99) ஓம் பரஸ்ந்நாக்ஷ்யை நம
100) ஓம் நாராயண ஸமாச்ரிதாயை நம
101) ஓம் தாரித்ர்ய த்வம்ஸிந்யை நம
102) ஓம் தேவ்யை நம
103) ஓம் ஸர்வோபத்ரவ நிவாரிண்யை நம
104) ஓம் நவ துர்காயை நம
105) ஓம் மஹாகாள்யை நம
106) ஓம் ப்ரம்ம விஷ்ணு சிவாத்மி நம
107) ஓம் த்ரிகால ஜ்நாநஸம் காயை பந்நாயை நம
108) ஓம் புவனேச்வர்யை நம
நாநாவித பரிமள பத்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமி