ஸ்ரீ சக்கரம்: பாகம் – 1


ஸ்ரீ என்றால் பெருமைசக்கரம் என்றால் சித்தியான தேவதையின் இருப்பிடம்பிந்து முக்கோணம், 8 கோணம் இரண்டு 10  கோணங்கள்,16  கோணம், 8 தளம், 16 தளம், 3 வட்டம், 3 கோட்டுப்பூபுரம் . இந்த அமைப்பில் உள்ளதே ஸ்ரீ சக்ரம் இந்த சக்கரத்தில் மேல்நோக்கி உள்ள சிவ சக்கரங்கள் 4,  கீழ்நோக்கி உள்ள சக்தி சக்கரங்கள் 5,  9 சக்கரங்கள்.  இதில் முக்கோணம், 8 கோணம் இரண்டு 10 கோணங்கள் ,16 கோணங்கள் ஆகியவை அனைத்தும் சக்திக்குரிய சக்கரங்கள்பிந்து, 8  இதழ் தாமரை,  16  இதழ்த் தாமரை,  4 கோட்டம் இவை சிவனுக்குரிய சக்கரங்களாகும்.
இந்த ஸ்ரீ சக்கரத்தில் பரதேவதை தன்னுடைய ஆவரண தேவதைகள்பரிவார தேவதைகள் என சுமார் 64 கோடி தேவதைகளுடன் 9 சக்கரங்களிலும் வாசம் செய்கிறாள்.  இன்னும் கணேசர்நவகிரகங்கள்,  27 நட்சத்திர தேவதைகள், 12 ராசி தேவதைகள், 51 பீட தேவதைகள் ஆகியோர்களும் ஸ்ரீசக்ரத்தில் வசிப்பதாக தேவி புஜங்கத்தில்  விவரிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ சக்கரத்தில் உள்ள ஒன்பது முக்கோணங்களுக்குள் 43முக்கோணங்கள் உள்ளன.
கோணங்களின் பெயர்கள்:
1. திரைலோக்கிய மோகனம்
2. சர்வா சாபரி  பூரகம்
3. சர்வ ஸம்ஷோபணம் 
4. சர்வ சௌபாக்கிய தாயகம்
5. சர்வார்த்த சாதகம்
6. சர்வ ரக்ஷா கரம்
7. சர்வ ரோஹஹரம் 
8. சர்வ சித்தி ப்ரதாயகம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *