நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

நாலாயிர திவ்வியப் பிரபந்தம் – 72 | Naalayira Divya Prabandham – 72

பாலொடு நெய்தயிரொண் சாந்தொடு சண்பகமும் பங்கயம் நல்லகருப் பூரமும் நாறிவர்,
கோலந றும்பவளச் செந்துவர் வாயினிடைக் கோமள வெள்ளிமுளைப் போல்சில பல்லிலக
நீலநி றத்தழகா ரைம்படை யின் நடுவே நின்கனி வாயமுத மிற்றுமு றிந்துவிழ,
ஏலும றைப்பொருளே ஆடுக செங்கீரை! ஏழுல கும்முடையாய்! ஆடுக ஆடுகவே.

நாலாயிர திவ்வியப் பிரபந்தம் – 71 | Naalayira Divya Prabandham – 71

உன்னையு மொக்கலையிற் கொண்டுத மில்மருவி உன்னொடு தங்கள்கருத் தாயின செய்துவரும்,
கன்னிய ரும்மகிழக் கண்டவர் கண்குளிரக் கற்றவர் தெற்றிவரப் பெற்றவெ னக்கருளி,
மன்னுகு றுங்குடியாய்! வெள்ளறை யாய்!மதில்சூழ் சோலைம லைக்கரசே! கண்ணபு ரத்தமுதே,
என்னவ லம்களை வாய் ! ஆடுக செங்கீரை, ஏழுல கும்முடையாய்! ஆடுக ஆடுகவே.

நாலாயிர திவ்வியப் பிரபந்தம் – 70 | Naalayira Divya Prabandham – 70

துப்புடை யாயர்கள் தம் சொல்வழு வாதொருகால் தூயக ருங்குழல்நல் தோகைம யிலனைய,
நப்பினை தன்திறமா நல்விடை யேழவிய நல்லதி றலுடைய நாதனு மானவனே,
தப்பின பிள்ளைகளைத் தனமிகு சோதிபுகத் தனியொரு தேர்கடவித் தாயொடு கூட்டிய,என்
அப்ப!எ னக்கொருகா லாடுக செங்கீரை, ஆயர்கள் போரேறே! ஆடுக ஆடுகவே.


நாலாயிர திவ்வியப் பிரபந்தம் – 69 | Naalayira Divya Prabandham – 69

காயம லர்நிறவா! கருமுகில் போலுருவா! கானக மாமடுவில் காளிய னுச்சியிலே,
தூயந டம்பயிலும் சுந்தர வென்சிறுவா! துங்கம தக்கரியின் கொம்புப றித்தவனே,
ஆயம றிந்துபொரு வானெதிர் வந்தமல்லை அந்தர மின்றியழித் தாடிய தாளிணையாய்!
ஆய!எ னக்கொருகா லாடுக செங்கீரை,ஆயர்கள் போரேறே! ஆடுக ஆடுகவே

 

நாலாயிர திவ்வியப் பிரபந்தம் – 68 | Naalayira Divya Prabandham – 68

மத்தள வுந்தயிரும் வார்குழல் நன்மடவார்
வைத்தன நெய்களவால் வாரிவி ழுங்கி, ஒருங்
கொத்தவி ணைமருத முன்னிய வந்தவரை
ஊருக ரத்தினொடும் உந்திய வெந்திறலோய்!
முத்தினி ளமுறுவல் முற்றவ ருவதன்முன்
முன்னமு கத்தணியார் மொய்குழல் களலைய,
அத்த!எ னக்கொருகா லாடுக செங்கீரை,
ஆயர்கள் போரேறே! ஆடுக ஆடுகவே.