manthiram

சூரியன் ஸ்தோத்ரம் 6 – Sooriyan Slogam

ஹனுமான் மங்களாஷ்டகம் 6

சௌந்தர்ய லஹரி – 31. அறுபத்து நாலு தந்திரங்களும் ஸ்ரீவித்தையும்

சது:ஷஷ்ட்யா தந்த்ரை: ஸகலம் அதிஸந்தாய புவனம்
ஸ்திதஸ் தத் தத் ஸித்தி ப்ரஸவ பரதந்த்ரை: பசுபதி: |
புனஸ் த்வன் நிர்பந்தாத் அகில புருஷார்த்தைக கடனா-
ஸ்வதந்த்ரம் தே தந்த்ரம் க்ஷிதிதலம் அவாதீதரதிதம் ||

அபிராமி அந்தாதி – 70. இசை, ஓவியம் இவற்றில் சிறக்க | Abirami Anthathi

கண்களிக் கும்படி கண்டுகொண்
டேன், கடம் பாடவியில்;
பண்களிக்கும் குரல் வீணையும்
கையும், பயோதரமும்,
மண்களிக்கும் பச்சை வண்ணமும்
ஆகி, மதங்கர்குலப்
பெண்களில் தோன்றிய எம்பெரு
மாட்டிதன் பேரழகே.

நாலாயிர திவ்வியப் பிரபந்தம் – 71 | Naalayira Divya Prabandham – 71

உன்னையு மொக்கலையிற் கொண்டுத மில்மருவி உன்னொடு தங்கள்கருத் தாயின செய்துவரும்,
கன்னிய ரும்மகிழக் கண்டவர் கண்குளிரக் கற்றவர் தெற்றிவரப் பெற்றவெ னக்கருளி,
மன்னுகு றுங்குடியாய்! வெள்ளறை யாய்!மதில்சூழ் சோலைம லைக்கரசே! கண்ணபு ரத்தமுதே,
என்னவ லம்களை வாய் ! ஆடுக செங்கீரை, ஏழுல கும்முடையாய்! ஆடுக ஆடுகவே.

ஸ்ரீ முருகன் கந்தர் அந்தாதி 17

சேரிக் குவடு மொழிவிழி யாடனச் செவ்விகுறச்
சேரிக் குவடு விளைந்ததன் றேநன்று தெண்டிரைநீர்
சேரிக் குவடு கடைநாளி லுஞ்சிதை வற்றசெவ்வேள்
சேரிக் குவடு புடைசூழ் புனத்திற் றினைவிளைவே.

நாலாயிர திவ்வியப் பிரபந்தம் – 70 | Naalayira Divya Prabandham – 70

துப்புடை யாயர்கள் தம் சொல்வழு வாதொருகால் தூயக ருங்குழல்நல் தோகைம யிலனைய,
நப்பினை தன்திறமா நல்விடை யேழவிய நல்லதி றலுடைய நாதனு மானவனே,
தப்பின பிள்ளைகளைத் தனமிகு சோதிபுகத் தனியொரு தேர்கடவித் தாயொடு கூட்டிய,என்
அப்ப!எ னக்கொருகா லாடுக செங்கீரை, ஆயர்கள் போரேறே! ஆடுக ஆடுகவே.


ஸ்ரீ முருகன் கந்தர் அந்தாதி 16

சேவற் கொடியும் பனிசாந் தகனுந் திருக்கரத்துச்
சேவற் கொடியுங் கொடியகண் டாய்ததினை சூழ்புனத்துச்
சேவற் கொடியுந் திவளத் தவளுந்தந் திக்களபச்
சேவற் கொடியு முடையாய் பிரியினுஞ் சேரினுமே.

 

சௌந்தர்ய லஹரி – 29. தேவி பரமசிவனை வரவேற்கும் வைபவம்

கிரீடம் வைரிஞ்சம் பரிஹர புர: கைடபபித:
கடோரே கோடீரே ஸ்கலஸி ஜஹி ஜம்பாரி மகுடம் |
ப்ரணம்ரேஷ்வேதேஷு ப்ரஸபம் உபயாதஸ்ய பவனம்
பவஸ்யாப்யுத்தானே தவ பரிஜனோக்திர் விஜயதே ||