ஆறாம் திருமுறை புக்க திருத்தாண்டகம் 4

வாரேறு வனமுலையாள் பாக மாக மழுவாள்கை யேந்தி மயானத் தாடிச்
சீரேறு தண்வயல்சூழ் ஓத வேலித் திருவாஞ்சி யத்தார் திருநள் ளாற்றார்
காரேறு கண்டத்தார் காமற் காய்ந்த கண்விளங்கு நெற்றியார் கடல்நஞ் சுண்டார்
போரேறு தாமேறிப் பூதஞ் சூழப் புலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே.